Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/சிறுதீங்கு கூட செய்யாதீர்கள்

சிறுதீங்கு கூட செய்யாதீர்கள்

சிறுதீங்கு கூட செய்யாதீர்கள்

சிறுதீங்கு கூட செய்யாதீர்கள்

ADDED : அக் 19, 2009 04:25 PM

Google News
Latest Tamil News

* ஆடம்பரமின்றி எந்தச் செயலையும் செய்ய வேண்டும். ஆடம்பரம் என்பது அரக்க குணம். பொருள் உள்ளவன் செய்யும் ஆடம்பரத்தைக் கண்டு, இல்லாதவன் ஏக்கம் கொள்கிறான். இதனால் விருப்பு வெறுப்பு உண்டாகிறது.

* பிறருக்கு நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதால் மனஅமைதி உண்டாகிறது. தன்னலத்தை மட்டும் கருத்தில் கொண்டு பொருள் சேர்ப்பவர்களுக்கு வாழ்வில் சுகம் உண்டாகலாம். ஆனால், ஆத்மசுகம் என்னும் தெய்வீக நிலை சேவையால் மட்டுமே கிடைக்கிறது.
* சென்றதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வேண்டும். கடந்ததை மீண்டும் பெற இயலாது. வருங்காலம் என்பது நம் கையில் இல்லாதது. நிகழ்காலம் ஒன்று தான் நம்கையில் இருப்பது. அதை பயனுள்ள வகையில் கழிப்பதே அறிவுடைய செயலாகும்.
* வேறொன்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். அன்பை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். மனிதன் ஒவ்வொருவனும் கடவுளின் குழந்தை என்ற உண்மையை உணர்ந்து யாருக்கும் சிறுதீங்கு கூட எண்ணாதீர்கள். பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது தான் மேலான பண்பு. -சாய்பாபா

Our Apps Available On

Dinamalar

Follow us